Saturday, April 21, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: என்ன படம் இது, ஒரு எழவும் புரியலை....!

இந்த ப்ளாக்க ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், இப்படி ஒரு நெலம வந்தா என்ன பண்றதுன்னு, அதாங்க எழுதுறதுக்கு ஒண்ணுமே வரலேன்னா என்ன பண்றதுன்னு! முன்னால எல்லாம் அடிக்கடி இப்படி ஆகி கமுக்கமா இருந்துடுவேன். இப்பவும் அப்படித்தான், என்ன எழுதுறதுன்னே தெரியாம நியூ போஸ்ட்ட ஓப்பன் பண்ணிட்டு உக்காந்திருக்கேன். ஆனா இந்தவாட்டி சும்மா விடுறதில்லன்னு களத்துல இறங்கிட்டேன்.

பிரபல பதிவர்கள்லாம் சினிமா பதிவுகளை வெச்சே ஓட்டிடுறாங்க, நாமலும் பிரபல பதிவர் (?) தானே, சரி இந்தக் கருமத்தையும் எதுக்கு விட்டு வைக்கனும்னு, சினிமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். (அப்போ இதுவரை டாகுடரை பத்தி எழுதுனதெல்லாம் என்னன்னு கேட்கப்படாது.....!)

இப்போ ட்ரெண்டு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு விமர்சனம் எழுதுறதுதானாம். அதையும் ஒரு பிரபல பதிவர்தான் சொன்னார். விமர்சனம் எழுத முன்னாடி அந்தப் படத்த வேற பார்க்கனுமாமே? சரி கருமமேன்னு கூகிள் சேர்ச்ல தேடி பாடுபட்டு கண்டுபுடிச்சி பார்த்துத் தொலச்சேன். எல்லாம் உங்களுக்காக.


நம்மளையும் நம்பி இந்த நாலு ஜீவன் இருக்கறத நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு, ஆனா இவனுங்க எடுக்குற படத்த நெனச்சாத்தான் பயமா இருக்கு...!


மொதல்ல படத்தோட பேரை பத்தி விரிவா பாத்துடலாம் (நமக்குன்னு ஒரு பாணிய டெவலப் பண்ண வேணாமா? அதுக்குத்தானுங்...........) ஒரு கல் ஒரு கண்ணாடி. பேரே ரொம்ப நல்லாருக்கு இல்லியா...? ஆனா இந்த கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, பட் இந்த மேட்டர் நல்லாருக்கு.

கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் டேமேஜாக போறது பசங்கதானே? (எல்லாரும் ஆணாதிக்க வாதின்னு திட்ட போறீங்க, திட்டுங்க ஆனா என்னைய இல்ல, இந்தப் படத்தோட டைரக்டர......... எனக்கென்ன வந்துச்சி?)

நல்லவேள ஒருகால் ஒரு கண்ணாடின்னு பேர் வெக்கல. வெச்சிருந்தா அப்புறம் காலுக்கும் கண்ணாடிக்கும் என்ன எழவு சம்பந்தம்னு எப்படி கண்டுபுடிக்கிறது? ஆனா கல்லுனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டாங்களே தவிர அது என்ன கல்லுன்னு சொல்லவே இல்லை. பட் படத்தோட பட்ஜெட்ட வெச்சி, அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன். கல்லு ஓகே, கண்ணாடி? முகம் பார்க்கிற கண்ணாடியா இல்ல வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? எதுவும் புரியலேன்னாலும் ஒரு பிரபல பதிவர் அப்படிங்கற ஸ்தானத்துல (!) இருந்து யோசிச்சு அது முகம் பார்க்கும் கண்ணாடியாத்தான் இருக்கனும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.

கல், கண்ணாடி மேட்டர் ஓகே, ஆனா அது என்ன ஒரு கல் ஒரு கண்ணாடி? படத்துல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்தான் வேற ஹீரோ, ஹீரோயின் கிடையாதுன்னு டைரக்டர் பின்நவீனத்துவ பாணில சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு போல...! அடடடா... என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சிந்தனை. இப்படியே டைட்டிலை பத்தி ரொம்ப நேரம் தாறுமாறா யோசிச்சுக்கிட்டு இருந்துட்டு, சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து  நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன், அப்பக்கூட எதுவும் தோனலை. 

நீங்களாவது அந்த படத்த பார்த்துப்புட்டு ஏதாவது தோனுச்சின்னா சொல்லுங்க சார்.... ஒரு நல்ல விமர்சனத்த தேத்திப்புடலாம்.... வேற என்ன பண்றது?


இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்.... இத பார்த்ததும் உங்களுக்கு விமர்சனம் அருவியா கொட்டுமே?

நன்றி வணக்கம்!


Monday, April 16, 2012

வலிக்கல....







நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....
அசிங்கபடுத்துனீங்க..
கேவலபடுத்துனீங்க...
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...

ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..

என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...) 

உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? 

ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...

இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..! 

அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. ! 


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...! 

அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....! 


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..! 


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..! 

ஆனா ஒரு கண்டிசன்...! 

"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!" 


இவன்
வெளியூர்க்காரன்

( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)

***

இந்தப்பதிவு வெளியூர்க்காரன் எழுதி பின் மறுபடியும் பட்டாபட்டி பதிவில் வெளியிடப்பட்டது. பட்டாபட்டியும் நானும் ஒருவரே என்று பலரும் சந்தேகப்படுவதால் நம்புவதால் இந்தப் பதிவு இப்போது இங்கேயும்......................